• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மீராமிதுனைக் கண்டிக்கும் பாரதிராஜா!

மீராமிதுனைக் கண்டிக்கும் பாரதிராஜா!

August 11, 2020
ಬಾಲಿವುಡ್ ನಟಿ ವಹೀದಾ ರೆಹಮಾನ್ಗೆ ದಾದಾ ಸಾಹೇಬ್ ಫಾಲ್ಕೆ ಪ್ರಶಸ್ತಿ..!

ಬಾಲಿವುಡ್ ನಟಿ ವಹೀದಾ ರೆಹಮಾನ್ಗೆ ದಾದಾ ಸಾಹೇಬ್ ಫಾಲ್ಕೆ ಪ್ರಶಸ್ತಿ..!

September 26, 2023
ಸುಪ್ರೀಂಕೋರ್ಟ್ ಇತಿಹಾಸದಲ್ಲೇ ಇದೇ ಮೊದಲು, ಬೆಂಗಳೂರು ಮೂಲದ ಮೂಕ ವಕೀಲೆ ವಾದ!

ಸುಪ್ರೀಂಕೋರ್ಟ್ ಇತಿಹಾಸದಲ್ಲೇ ಇದೇ ಮೊದಲು, ಬೆಂಗಳೂರು ಮೂಲದ ಮೂಕ ವಕೀಲೆ ವಾದ!

September 26, 2023
ಕಾವೇರಿ ವಿವಾದ: ವಿರೋಧ, ಪ್ರತಿಭಟನೆಗಳ ನಡುವಲ್ಲೇ ತಮಿಳುನಾಡಿಗೆ ನೀರು ಬಿಡುಗಡೆ

ಪ್ರತಿಭಟನೆ ಮಧ್ಯೆ ಕರ್ನಾಟಕಕ್ಕೆ ಬಿಗ್ ಶಾಕ್.. ತಮಿಳುನಾಡಿಗೆ ಮತ್ತೆ 3 ಸಾವಿರ ಕ್ಯೂಸೆಕ್ ನೀರು ಹರಿಸುವಂತೆ ಆದೇಶ..!

September 26, 2023
ಗರುಡಪುರಾಣ ಸಿನಿಮಾದ ಟೀಸರ್ ರಿಲೀಸ್ ಮಾಡಿದ ಅಶ್ವಿನಿ ಪುನೀತ್ ರಾಜಕುಮಾರ್

ಗರುಡಪುರಾಣ ಸಿನಿಮಾದ ಟೀಸರ್ ರಿಲೀಸ್ ಮಾಡಿದ ಅಶ್ವಿನಿ ಪುನೀತ್ ರಾಜಕುಮಾರ್

September 26, 2023
ಮೂರು ಡಿಸಿಎಂ ಸ್ಥಾನಕ್ಕೆ ಬೇಡಿಕೆ: ಹೈಕಮಾಂಡ್ ನಿರ್ಧಾರಕ್ಕೆ ಬದ್ಧ ಎಂದ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಮತ ಸೆಳೆಯಲು ಮಹಿಳಾ ಮೀಸಲಾತಿ ಮಸೂದೆ ತರುತ್ತಿದ್ದಾರೆ ಹೊರತು ಮಹಿಳೆಯರ ಮೇಲೆ ಕಾಳಜಿಯಿಂದಲ್ಲ: ಸಿದ್ದರಾಮಯ್ಯ

September 26, 2023
ಕಾವೇರಿ ಸಮಸ್ಯೆ ಪರಿಹರಿಸಲು ಎಲ್ಲ ಪಕ್ಷದ ನಾಯಕರಿಗೆ ನಟ ಕಿಚ್ಚ ಸುದೀಪ್​ ಬಹಿರಂಗ ಪತ್ರ

ಕಾವೇರಿ ಸಮಸ್ಯೆ ಪರಿಹರಿಸಲು ಎಲ್ಲ ಪಕ್ಷದ ನಾಯಕರಿಗೆ ನಟ ಕಿಚ್ಚ ಸುದೀಪ್​ ಬಹಿರಂಗ ಪತ್ರ

September 26, 2023
ಸೆಪ್ಟೆಂಬರ್ 11 ಕ್ಕೆ ಬೆಂಗಳೂರು ಬಂದ್; 32 ಸಂಘಟನೆಗಳ ಬೆಂಬಲ

ಬೆಂಗಳೂರು ಬಂದ್​ಗೆ ಪೊಲೀಸರು ಫುಲ್​ ಅಲರ್ಟ್.. ಟೌನ್ ಹಾಲ್ ಬಳಿ 250ಕ್ಕೂ ಹೆಚ್ಚು ಪೊಲೀಸರ ಬಂದೋಬಸ್ತ್..!

September 26, 2023
ಸೆಪ್ಟೆಂಬರ್ 11 ಕ್ಕೆ ಬೆಂಗಳೂರು ಬಂದ್; 32 ಸಂಘಟನೆಗಳ ಬೆಂಬಲ

ನಾಳೆ ಬೆಳಗ್ಗೆ 6 ಗಂಟೆಯಿಂದಲೇ ಸ್ತಬ್ಧವಾಗಲಿದೆ ರಾಜಧಾನಿ..!

September 25, 2023
ಕನ್ನಡದ ಬಿಗ್ ಬಾಸ್ 10 – ಅಕ್ಟೊಬರ್ 8ರಿಂದ ಶುರು

ಫಸ್ಟ್ ಟೈಮ್ ಬಿಗ್ ಬಾಸ್ 10 ಮನೆಗೆ ಹೋಗುವ ಸ್ಪರ್ಧಿಯ ಹೆಸರು ರಿವೀಲ್ ಮಾಡಿದ ಕಲರ್ಸ್ ವಾಹಿನಿ

September 24, 2023
ಚಂದ್ರನ ಮೇಲೆ ಪ್ರಗ್ಯಾನ್ ರೋವರ್‌ಗೆ ಎದುರಾಯ್ತು ಕುಳಿ! ಮಾರ್ಗ ಬದಲಿಸಿದ ಇಸ್ರೋ

ವಿಕ್ರಮ್ ಲ್ಯಾಂಡರ್ ಪುನಶ್ಚೇತನಕ್ಕೆ 14 ದಿನ ಕಾಯಲಿದೆ ಇಸ್ರೊ

September 24, 2023
ಕೆರೆಗಳನ್ನು ತುಂಬಿಸುವ ಹಾಗೂ ಬ್ಯಾರೇಜ್ ನಿರ್ಮಾಣ ಕಾರ್ಯಗಳಿಗೆ ಒತ್ತು ನೀಡಿ: ಸಣ್ಣ ನೀರಾವರಿ ಸಚಿವ ಎನ್. ಎಸ್ ಬೋಸರಾಜು ಸೂಚನೆ – ವಿಕಾಸಸೌಧದಲ್ಲಿಂದು ಸಣ್ಣ ನೀರಾವರಿ ಮತ್ತು ಅಂತರ್ಜಲ ಇಲಾಖೆಯ ಪ್ರಗತಿ ಪರಿಶೀಲನಾ ಸಭೆ

ಸೆ.​​​ 26ರಂದು ಬೆಂಗಳೂರು ಬಂದ್​​ : ಏನಿರುತ್ತೆ? ಏನಿರಲ್ಲ? ಇಲ್ಲಿದೆ ಸಂಪೂರ್ಣ ವಿವರ..!

September 23, 2023
ಕುತೂಹಲ ಹೆಚ್ಚಿಸಿದ ವಿಜಯ್ ರಾಘವೇಂದ್ರ ಹಾಗೂ ಸೋನು ಗೌಡ ಜೋಡಿಯ ಮರೀಚಿ ಸಿನಿಮಾದ ಟೀಸರ್..!

ಕುತೂಹಲ ಹೆಚ್ಚಿಸಿದ ವಿಜಯ್ ರಾಘವೇಂದ್ರ ಹಾಗೂ ಸೋನು ಗೌಡ ಜೋಡಿಯ ಮರೀಚಿ ಸಿನಿಮಾದ ಟೀಸರ್..!

September 23, 2023
Sakhigeetha
  • Home
  • Language
    • English
      • Delivery of free food packets at all Indira canteens in BBMP limits from tomorrow
      • Govt plans to open physical triaging centres in 10 districts: Minister Arvind Limbavali
      • To buy groceries,vegetables and daily needs there is NO BAR for using vehicle
      • A new Covid Care Centre inaugurated in GKVK campus
      • Nearly 18 crore vaccine doses provided to States/UTs Free of Cost by Govt. of India
      • Don’t lose heart, we are with you-Murugesh Nirani; Nirani Foundation and Bilagi BJP unit come to the aid of COVID-19 patients
      • Vaccination for 18-44 age group in major govt hospitals and govt medical colleges from Monday, 10th May
      • 1800 beds available in KIMS and BMCRI : Minister Dr.K.Sudhakar
    • తెలుగు
    • தமிழ்
    • മലയാളം
  • News
    • Politics
      • ರಾಜ್ಯದಲ್ಲಿ ಉತ್ಪಾದನೆಯಾಗುವ ಆಮ್ಲಜನಕವನ್ನು ರಾಜ್ಯಕ್ಕೆ ಹಂಚಿಕೆ ಮಾಡಬೇಕೆಂದು ಕೇಂದ್ರ ಸರ್ಕಾರಕ್ಕೆ ಮನವಿ: ಸಚಿವ ಡಾ.ಕೆ.ಸುಧಾಕರ್
      • ಲಾಕ್ ಡೌನ್ ವೇಳೆ 14 ದಿನಗಳ ಕಾಲ ಇಂದಿರಾ ಕ್ಯಾಂಟೀನ್ ನಲ್ಲಿ ಉಚಿತ ಆಹಾರ ವಿತರಣೆ – ಪೌರಾಡಳಿತ ಇಲಾಖೆಯಿಂದ ಮಹತ್ವದ ನಿರ್ಧಾರ
      • ಬೇಡಿಕೆ-ಪೂರೈಕೆಯಲ್ಲಿ ಪಾರದರ್ಶಕತೆ ತರಲು ಸರಕಾರದ ಕ್ರಮ – ಟೆಸ್ಟ್‌ ವರದಿ ತಡವಾದರೆ ಲ್ಯಾಬ್‌ಗಳಿಗೆ ದಂಡ
      • ಸಾಸ್ಟ್ ಪೋರ್ಟಲ್‌ ನಲ್ಲಿ ಆಮ್ಲಜನಕ, ರೆಮಿಡಿಸಿವರ್‌ ಜತೆಗೆ ಖಾಸಗಿ ಆಸ್ಪತ್ರೆಗಳ ಸರಕಾರಿ ಬೆಡ್‌ಗಳ ಮಾಹಿತಿ
      • ಜೆಮ್ ಶೆಡ್ ಪುರದಿಂದ ಬೆಂಗಳೂರಿಗೆ ಬಂತು 120 ಮೆಟ್ರಿಕ್ ಟನ್ ಆಕ್ಸಿಜನ್
    • Sports
    • World
    • Business
  • Entertainment
    • Music
    • Food
    • Movie
      • ಚಿತ್ರರಂಗದ ಸಂಗೀತ ಕಲಾವಿದರ ನೆರವಿಗೆ ನಿಂತ ಅಭಿನಯ ಸರಸ್ವತಿ ಬಿ. ಸರೋಜಾದೇವಿ
  • Team
No Result
View All Result
Sakhigeetha
No Result
View All Result
Home தமிழ்

மீராமிதுனைக் கண்டிக்கும் பாரதிராஜா!

by Harini Bengaluru
August 11, 2020
in தமிழ்
282 3
0
மீராமிதுனைக் கண்டிக்கும் பாரதிராஜா!
553
SHARES
1.6k
VIEWS
Share on FBShare on TwitterShare on whatsapp
0
0

சமீபத்தில் ஒரு வீடியோவில் நடிகர் விஜய் பற்றியும் சூர்யா பற்றியும் மோசமான கருத்துகளை வெளியிட்டிருந்தார் நடிகையும் மாடலுமான மீராமிதுன்… ரசிகர்கள் மத்தியில் பல அதிர்வுகளை உண்டாக்கியது அந்த கருத்து. அவர்களும் பதிலுக்கு மீரா மிதுனை சரமாரியாக திட்டித் தீர்த்தார்கள்.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் மீரா மிதுனை கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது என்று கண்டித்திருக்கிறார்.
கூடவே சங்கங்கள் ஏன் அமைதிகாக்கின்றன என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதோ பாரதிராஜாவின் அறிக்கை!

என் இனிய தமிழ் மக்களே… வணக்கம்!

சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது.

புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும், மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ்சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.

ஒருவரையொருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை… ஒருவரையொருவர் மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோமா என்ன? என்ற கவலையும் சேர்ந்துகொள்கிறது.

இதோ,

நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்..

கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்?

திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே.. !!

அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீராமிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார்.

திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.

சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.

மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி… எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்.

வார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையாமல்,

இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும்… பசியைப் போக்கும்… அவசியமானவைகளாக அவை உதடுதாண்டி வெளிவரட்டும்.

நம் சகக் கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும்… நடிகர் சங்கம்
மட்டுமல்ல.. வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை.

தேர்தல் நடைபெறாத சங்கம் என்றால், சொந்தத் தேவைகளுக்காகக் கூட கண்டனக்குரல் தராத அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது?

யாரோ ஒருவனின் அவமானம்தானே? நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்துபோகும்… அந்த சேறு நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா? எல்லோரும் கூடிக் கண்டித்திருக்க வேண்டாமா??

சமூக ஊடகங்களும் இப்படிப்பட்ட அவதூறுகளைக் கண்ணியத்திற்குட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.

முன்பெல்லாம் பத்திரிகை தர்மம் என்ற ஒன்றும்… ஊடகங்களும் கலைஞர்களும் ஒரு குடும்பம் என்ற கட்டுக்கோப்பில் இருந்தோம். ஆனால் இன்று அவை காற்றிலெறியப்பட்டு, கட்டற்று போய்க்கொண்டிருப்பதாகத் தோணுகிறது. மற்றவர்களை அவர்களின் வாழ்க்கை அமைப்பைக் கேலிசெய்யும் வார்த்தைகளை … எழுத்தைக் கூட தேடிப்பிடித்து கத்தரி போடுங்கள் நண்பர்களே..

இப்படிப்பட்டவர்களின் ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதனால் சமூக ஊடகங்கள் நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை… தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

உயரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ரசிகர்களின் பின்னூட்ட வார்த்தைகளும் மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் இருப்பதைக் கவனித்தே வருகிறேன்.

நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர். ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்… ??!நமக்கென்ன என நட்சத்திரங்களும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

அவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் கூட…

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படிக்கக் கூசும் கேவலமானவைகளாக உள்ளன.

ஒரு அறிக்கைவிட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த ரசிகன் எங்கிருந்தோ கழிவின் மீது கல்லடிக்கிறான். பாருங்கள், அது நம் வீட்டு அடுப்படியில் நாறுகிறது.

உங்கள் பெயரும் புகழும் நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள் உச்ச நட்சத்திரங்களே…

என் போன்றோருக்கு உங்கள் மீது தூசு விழுந்தாலும் உத்திரம் விழுந்தது போல்b வலிக்கிறது.

ஒருவருக்கொருவர் மரியாதை செய்து இணக்கமாக உயரும் சூழ்நிலைகளை விரைவில் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!

பாசத்துடன்

உங்கள் பாரதிராஜா

Share221Tweet138Send
ADVERTISEMENT
Harini Bengaluru

Harini Bengaluru

Related Posts

ரம்யா நம்பீசனின் ‘சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்’!

ரம்யா நம்பீசனின் ‘சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்’!

by Harini Bengaluru
July 17, 2020
0

ரம்யா நம்பீசன் வெறும் நடிகை மட்டுமல்ல… பாடகி, ஸ்கிர்ப்ட் அனுபவம் கொண்டவர் என்று அவருக்குப் பல முகம் உண்டு. இப்போது இன்னொரு புதிய முகமாக சைபர் வெளியில்...

வாக்கு கேட்கும் விஜய்சேதுபதி!

வாக்கு கேட்கும் விஜய்சேதுபதி!

by Harini Bengaluru
July 8, 2020
0

கூட்டணி என்பது அரசியலுக்கு மட்டுமல்ல… சினிமாவுக்கும் முக்கியம்… அதிலும் வெற்றிக் கூட்டணி என்றால் விடவே விடாது… தொடரும்!விஜய்சேதுபதியும் கூட்டணிக் கணக்கை போட்டிருக்கிறார்.அவருடைய புதிய படமான துக்ளக் தர்பாரில்தான்...

சூரியின் கருப்பன்!

சூரியின் கருப்பன்!

by Harini Bengaluru
July 8, 2020
0

தலைப்பை படித்ததும் சூரி அடுத்து நடிக்கப் போகும் அடுத்த படத் தலைப்பு என எண்ணிவிடாதீர்கள்… இது சூரி வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையின் பெயர்!கொரோனா ஊரடங்கு தொடங்கிய சிறிது...

இயக்குனர் மனோபாலா முதன்முதலாக இயக்கிய குறும்படம்

இயக்குனர் மனோபாலா முதன்முதலாக இயக்கிய குறும்படம்

by Harini Bengaluru
July 7, 2020
0

மனோபாலா என்பவரை இன்றைய தலைமுறைக்கு காமடி நடிகராகத்தான் தெரியும்… ஆனால் அவர் வெற்றிகரமான இயக்குனர்… வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர்! மீண்டும் தன் திறமையை வெளிக்காட்டும் வகையில் ஒரு...

  • Trending
  • Comments
  • Latest
ನೂತನ‌ ಸಿಎಂ ಆಗಿ ಸಿ.ಟಿ.ರವಿ ನೇಮಕ…?

ನೂತನ‌ ಸಿಎಂ ಆಗಿ ಸಿ.ಟಿ.ರವಿ ನೇಮಕ…?

July 22, 2021
ಕೊರೋನಾ ಮಾರಿಗೆ ಬಲಿಯಾದ  ನಿವೃತ್ತ ಹಿರಿಯ ಐಪಿಎಸ್‌ ಅಧಿಕಾರಿ ಕೆವಿಆರ್‌ ಠಾಗೋರ್ ….

ಕೊರೋನಾ ಮಾರಿಗೆ ಬಲಿಯಾದ ನಿವೃತ್ತ ಹಿರಿಯ ಐಪಿಎಸ್‌ ಅಧಿಕಾರಿ ಕೆವಿಆರ್‌ ಠಾಗೋರ್ ….

May 12, 2021
ನಟ ವಿಜಯರಾಘವೇಂದ್ರ ಪತ್ನಿ ಸ್ಪಂದನಾ ನಿಧನ

ನಟ ವಿಜಯರಾಘವೇಂದ್ರ ಪತ್ನಿ ಸ್ಪಂದನಾ ನಿಧನ

August 7, 2023
ಪರಮ ವಿಷ್ಣು ಲೋಕ

ಪರಮ ವಿಷ್ಣು ಲೋಕ

4
ಬೆಟ್ಟವೇರಿ ಬೆಟ್ಟದಂತ ಸಾಧನೆ ಮಾಡಿದ ಅರಮನೆ ನಗರಿಯ ಸಾಧಕಿ: ರುಕ್ಮಿಣಿ ಚಂದ್ರನ್

ಬೆಟ್ಟವೇರಿ ಬೆಟ್ಟದಂತ ಸಾಧನೆ ಮಾಡಿದ ಅರಮನೆ ನಗರಿಯ ಸಾಧಕಿ: ರುಕ್ಮಿಣಿ ಚಂದ್ರನ್

3
ಸಿಡಿ ಕೋರರ ಹಿಸ್ಟರಿ; ಮತ್ತಷ್ಟು ರಾಜಕಾರಣಿಗಳಿಗೆ ಡವ…ಡವ…

ಸಿಡಿ ಕೋರರ ಹಿಸ್ಟರಿ; ಮತ್ತಷ್ಟು ರಾಜಕಾರಣಿಗಳಿಗೆ ಡವ…ಡವ…

2
ಬಾಲಿವುಡ್ ನಟಿ ವಹೀದಾ ರೆಹಮಾನ್ಗೆ ದಾದಾ ಸಾಹೇಬ್ ಫಾಲ್ಕೆ ಪ್ರಶಸ್ತಿ..!

ಬಾಲಿವುಡ್ ನಟಿ ವಹೀದಾ ರೆಹಮಾನ್ಗೆ ದಾದಾ ಸಾಹೇಬ್ ಫಾಲ್ಕೆ ಪ್ರಶಸ್ತಿ..!

September 26, 2023
ಸುಪ್ರೀಂಕೋರ್ಟ್ ಇತಿಹಾಸದಲ್ಲೇ ಇದೇ ಮೊದಲು, ಬೆಂಗಳೂರು ಮೂಲದ ಮೂಕ ವಕೀಲೆ ವಾದ!

ಸುಪ್ರೀಂಕೋರ್ಟ್ ಇತಿಹಾಸದಲ್ಲೇ ಇದೇ ಮೊದಲು, ಬೆಂಗಳೂರು ಮೂಲದ ಮೂಕ ವಕೀಲೆ ವಾದ!

September 26, 2023
ಕಾವೇರಿ ವಿವಾದ: ವಿರೋಧ, ಪ್ರತಿಭಟನೆಗಳ ನಡುವಲ್ಲೇ ತಮಿಳುನಾಡಿಗೆ ನೀರು ಬಿಡುಗಡೆ

ಪ್ರತಿಭಟನೆ ಮಧ್ಯೆ ಕರ್ನಾಟಕಕ್ಕೆ ಬಿಗ್ ಶಾಕ್.. ತಮಿಳುನಾಡಿಗೆ ಮತ್ತೆ 3 ಸಾವಿರ ಕ್ಯೂಸೆಕ್ ನೀರು ಹರಿಸುವಂತೆ ಆದೇಶ..!

September 26, 2023
SakhiGeetha Women's Magazine

Copyright © 2021 sakhigeetha

Navigate Site

  • About Us
  • Team
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

  • Home
  • Language
    • English
      • Delivery of free food packets at all Indira canteens in BBMP limits from tomorrow
      • Govt plans to open physical triaging centres in 10 districts: Minister Arvind Limbavali
      • To buy groceries,vegetables and daily needs there is NO BAR for using vehicle
      • A new Covid Care Centre inaugurated in GKVK campus
      • Nearly 18 crore vaccine doses provided to States/UTs Free of Cost by Govt. of India
      • Don’t lose heart, we are with you-Murugesh Nirani; Nirani Foundation and Bilagi BJP unit come to the aid of COVID-19 patients
      • Vaccination for 18-44 age group in major govt hospitals and govt medical colleges from Monday, 10th May
      • 1800 beds available in KIMS and BMCRI : Minister Dr.K.Sudhakar
    • తెలుగు
    • தமிழ்
    • മലയാളം
  • News
    • Politics
      • ರಾಜ್ಯದಲ್ಲಿ ಉತ್ಪಾದನೆಯಾಗುವ ಆಮ್ಲಜನಕವನ್ನು ರಾಜ್ಯಕ್ಕೆ ಹಂಚಿಕೆ ಮಾಡಬೇಕೆಂದು ಕೇಂದ್ರ ಸರ್ಕಾರಕ್ಕೆ ಮನವಿ: ಸಚಿವ ಡಾ.ಕೆ.ಸುಧಾಕರ್
      • ಲಾಕ್ ಡೌನ್ ವೇಳೆ 14 ದಿನಗಳ ಕಾಲ ಇಂದಿರಾ ಕ್ಯಾಂಟೀನ್ ನಲ್ಲಿ ಉಚಿತ ಆಹಾರ ವಿತರಣೆ – ಪೌರಾಡಳಿತ ಇಲಾಖೆಯಿಂದ ಮಹತ್ವದ ನಿರ್ಧಾರ
      • ಬೇಡಿಕೆ-ಪೂರೈಕೆಯಲ್ಲಿ ಪಾರದರ್ಶಕತೆ ತರಲು ಸರಕಾರದ ಕ್ರಮ – ಟೆಸ್ಟ್‌ ವರದಿ ತಡವಾದರೆ ಲ್ಯಾಬ್‌ಗಳಿಗೆ ದಂಡ
      • ಸಾಸ್ಟ್ ಪೋರ್ಟಲ್‌ ನಲ್ಲಿ ಆಮ್ಲಜನಕ, ರೆಮಿಡಿಸಿವರ್‌ ಜತೆಗೆ ಖಾಸಗಿ ಆಸ್ಪತ್ರೆಗಳ ಸರಕಾರಿ ಬೆಡ್‌ಗಳ ಮಾಹಿತಿ
      • ಜೆಮ್ ಶೆಡ್ ಪುರದಿಂದ ಬೆಂಗಳೂರಿಗೆ ಬಂತು 120 ಮೆಟ್ರಿಕ್ ಟನ್ ಆಕ್ಸಿಜನ್
    • Sports
    • World
    • Business
  • Entertainment
    • Music
    • Food
    • Movie
      • ಚಿತ್ರರಂಗದ ಸಂಗೀತ ಕಲಾವಿದರ ನೆರವಿಗೆ ನಿಂತ ಅಭಿನಯ ಸರಸ್ವತಿ ಬಿ. ಸರೋಜಾದೇವಿ
  • Team

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Facebook
Facebook
fb-share-icon
Twitter
Visit Us
Tweet